சுடச்சுட

  

  மணப்பாறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 10 பேர் காயமடைந்தனர்.
  திண்டுக்கல் மாவட்டம் கண்ணாப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்தினர் 21 பேருடன் சென்னைக்கு வேனில் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டனர்.  மணப்பாறை அடுத்த திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலை தெரசா நகர் அருகே வந்தபோது வேன் டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்தவர்களில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த மணப்பாறை போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மணப்பாறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai