சுடச்சுட

  

  திருச்சி மாவட்டம் மணப்பாறை ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  இக்கோயிலில் நடைபெற்றுவரும் சித்திரை திருவிழாவில்  ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் மற்றும் ரதபவனி நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் பூத்தட்டுகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதி வழியாக உலா வந்து மாரியம்மனுக்கு பூக்களை செலுத்தினர்.
  ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் வே.பிரபாகர் மற்றும் பரம்பரை அறங்காவலர் ஆர்.வி.எஸ்.வீரமணி ஆகியோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai