சுடச்சுட

  

  இலங்கையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
  இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக பாதுகாப்பு கருதி திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரால் பலத்த  பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் சோதனையிடப்படுகிறது. மோப்ப நாய் மூலமாகவும், மெட்டல் டிடெக்டர் மூலமாகவும் சோதனையிட்ட பிறகே பயணிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதே போல திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோயிலிலும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிட்ட பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai