சுடச்சுட

  

  திருச்சியில், நகைகளை மோசடி செய்ததாக தனது மகள் மீது தாயார் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
  திருச்சி மலைக்கோட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணனின் மனைவி சரோஜா(75). இவருக்கு சொந்தமான 53 பவுன் தங்க நகைகளை அவரது மகள் தனலெட்சுமி(45) வங்கியில் அடமானம் வைப்பதற்காக கடந்த 8.2.2019 அன்று வாங்கிச் சென்றுள்ளார்.  
  அதை பலமுறை கேட்டும் திருப்பித் தராமல் இருந்து வந்துள்ளார். இதனால் சரோஜா கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தனலெட்சுமி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai