சுடச்சுட

  

  பயங்கரவாதத்தை ஒழிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும்

  By DIN  |   Published on : 23rd April 2019 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பயங்கரவாதத்தை ஒழிக்கும் முயற்சியில் உலக நாடுகள் அணிதிரள வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
  இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது: 
  இலங்கையில், கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் புனித தினம் அனுசரிக்கும் நாளில் கிறிஸ்தவ தேவாலயங்களிலும், உணவு விடுதிகளிலும்  வெடிகுண்டு தாக்குதல் நடத்திய கொடுமை நிகழ்த்திருக்கிறது. இந்தக் கோரத் தாக்குதல் மனித இனத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள யுத்தம். 
  இந்த கோர சம்பவத்தை அரங்கேற்றியவர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்க்கும் முயற்சியை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும். இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, இத்துயரத்தை  தாங்கும் சக்தியை இறைவன் அளிக்க வேண்டும் என  அவர்  தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai