சுடச்சுட

  


  திருச்சியில் இயங்கி வரும் மத்திய அரசு கல்வி நிறுவனமான, கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 3 ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் நவல்கிஷோர் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பி. உதய்குமார் ரெட்டி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பேசினார். கூடுதல் கோட்ட மேலாளர் சி. ஆர். ஹரிஷ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai