சுடச்சுட

  

  மரக்கிளைகள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

  By DIN  |   Published on : 24th April 2019 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி பகுதியில் செவ்வாய்க் கிழமை மரக் கிளைகள் முறிந்து விழுந்ததால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  தாளக்குடி பகுதியில், செவ்வாய்க்கிழமை காலை சாலையோரம் இருந்த  புளிய மரம் மற்றும் நாவல் மரக்கிளைகள் திடீரென முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. இதனால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.
  மேலும், திருச்சி சிதம்பரம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல், சமயபுரம் நெ.1 டோல்கேட், தாளக்குடி, அகிலாண்டபுரம், முத்தமிழ்நகர் போன்ற பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின் வாரிய ஊழியர்கள், சமயபுரம் போக்குவரத்து போலீஸார் மற்றும் ஸ்ரீரங்கம் தீயணைப்பு படை வீரர்கள்,  கொள்ளிடம் போலீஸார் ஆகியோர் பொக்லைன் இயந்திரம் கொண்டு சாலையில் கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai