சுடச்சுட

  


  இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தின் எதிரொலியாக திருச்சி ரயில்நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் செவ்வாய்க்கிழமை பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
  இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.திருச்சி ரயில் நிலையத்தில் நின்றிருந்த தேஜஸ் ரயிலில் இருந்த பயணிகளின் உடைமைகள் உஷ்பட ரயில் நிலையத்திலிருந்து வெளியில் வரும் அனைத்து பயணிகளின் உடமைகளையும் பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டனர்.  மெட்டல் டிடெக்டர் கருவியுடன் ரயில் நிலையத்துக்கு வருபவர்கள் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
  மோப்பநாய் உதவியுடன் வாகனம் நிறுத்தும் இடங்கள்,ரயில் நிலைய பிளாட்பாரம்  அனைத்தும் சோதனையிடப்பட்டது. தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படையின் ஆய்வாளர் சுஜித்ராய் தலைமையிலும்,வெடிகுண்டு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலும் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai