நகர விற்பனைக் குழுவில் இணைய தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு அழைப்பு

திருச்சி மாநகராட்சியால் அமைக்கப்படும் நகர விற்பனைக் குழுவில் இணைய தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு ஆணையர் ந. ரவிச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.


திருச்சி மாநகராட்சியால் அமைக்கப்படும் நகர விற்பனைக் குழுவில் இணைய தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு ஆணையர் ந. ரவிச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் வியாபாரத்தில் ஈடுபடும் தெருவோர வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், தலையில் சுமந்து பொருள்களை விற்பனை செய்வோர் ஆகியோரது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு புதிய ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி, இத்தகைய வியாபாரிகள் அனைவரையும் இணைத்து நகர விற்பனைக் குழு அமைக்கப்படவுள்ளது.
இந்த விற்பனைக் குழுவில் 13 உறுப்பினர்கள் இடம்பெறுவர். இதில், வியாபாரிகளின் பிரதிநிதிகளாக 6 பேர் தேர்தல் முறையில் தேர்வு செய்யப்படுவர். இதன்படி, திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்படும் சங்கங்கள் மற்றும் வியாபாரிகள் தரப்பில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதுவரை, 3,458 பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சியின் 4 கோட்ட அலுவலகங்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உறுப்பினர் பட்டியலில் விடுபட்டுள்ள நடைபாதை வியாபாரிகள், தலையில் சுமந்து விற்பனை செய்வோர், தள்ளுவண்டி வியாபாரிகள் தவறாமல் தங்களது பெயரை இணைத்துக் கொள்ள வேண்டும்.
அவரவர் முழு விவரங்களுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆதாரத்தை அளித்து உறுப்பினராக பதிவு செய்யலாம். மே 2ஆம் தேதிக்குள் தகுதியான வியாபாரிகள் அனைவரும் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆதாரங்களுடன் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் மாநகராட்சி உதவி ஆணையர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றார் ஆணையர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com