பாரதிதாசன் பல்கலையில் துறை சார்ந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்  B.voc பட் டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி இருப்பதாக அப் பல்கலையில் செயல்பட்டு வரும் டி.டி.யு.கௌசால் கேந் திரா அமைப்பின் இயக்குநர்


திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்  B.voc பட் டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி இருப்பதாக அப் பல்கலையில் செயல்பட்டு வரும் டி.டி.யு.கௌசால் கேந் திரா அமைப்பின் இயக்குநர் ஏ.ராம்க ணேஷ் செவ்வாய்க்கிழமை தெரி வித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பு:
டி.டி.யு.கௌசால் கேந்திரா  என்ற அமைப்பானது திறன் சார்ந்த பட்டப்படிப்புகளை வழங்குவதற்காக பல்கலைக்கழக மானியக்குழு உதவியுடன் உயர்கல்வி நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு பிரத்யேக மையமாகும். இம்மைய த்தின் மூலம் B.voc.in automobile technology,B.voc.in logistics and supply chain Management, B,voc in trouble shooting and Maintanance of Electrical and Electronic Equipments  என்ற 3 வெவ்வேறு துறைகள் சார்ந்த பட்டப்படிப்புகளை நடத்தி வருகிறது. இப்பட் டப்படிப்புகளுக்கான பாடத் திட்டங்கள் 60 சதவிகிதம் செய்முறைப் பயிற்சிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த நிறுவனங்களில் செய்முறைப் பயிற்சிகளும் அளி க்கப்படுகிறது. பட்டப்படிப்பில் மாண வர்களின் தரம் உயர்த்த பயிற்சிக்கூடங்கள், செய்முறைப் பயிற்சிகள் என உடனடி வேலை வாய்ப்புக்கான அனைத்து பயிற்சிகளும் மிகக்குறைந்த கல்விக்கட்டணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பட்டப்படிப்புகளுக்கான இந்த கல்வியாண்டுக்கான சேர்க் கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை டி.டி.யு. கௌ சால் கேந்திரா, பாரதி தாசன் பல்கலைக் கழகம், காஜாமலை வளாகம், திருச்சிராப்பள்ளி-23 என்ற அலுவலக முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 6.5.2019க்குள் சமர்ப் பிக்க வேண்டும்.மேலும் விவரங் களுக்கும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யவும் பல்கலை க்கழக http://WWW.Bdu.ac.in/admissions/admissions/admission-regular-programmers.pho   இணையதளத்தில் தகவல் தெரிந்து கொள்ளலாம். மேலும்,  8056061126, 8695288874, 9543 227731 என்ற தொலைபேசி எண் களிலும் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com