சுடச்சுட

  


  அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் பள்ளி மாணவர், மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.
  தொடக்க விழாவுக்கு, ஆர்விஎஸ் கல்லூரியின் முதல்வர் எஸ். ரூபன்ராஜ், தலைமை வகித்து அடிப்படை வானவியல் எனும் தலைப்பில் தொலைநோக்கி, கோள்கள், செயற்கைக்கோள்கள், வானியல் அறிவியல் குறித்து விளக்கிக் கூறினார்.
  கோளரங்க திட்ட இயக்குநர் ஆர். அகிலன், அறிவியல் உதவியாளர் எஸ். ஜெயபால், தொழில்நுட்ப உதவியாளர் ஜி. சரவணன் ஆகியோர் முகாமின் நோக்கங்கள் குறித்து விளக்கிப் பேசினர். முகாமில், திருச்சி மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் பங்கேற்றனர்.
  மூன்று நாள் நடைபெறும் இந்த முகாமில், அடிப்படை வானவியல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, முடிவெடு-செயல்படு, அடிப்படை மின்னணுவியல், பறவைகள் கண்காணித்தல், காகிதக் கலை, யோகக் கலை, புவி வெப்பமயமாதல், ஓவியமும், தமிழர் பண்பாடும், அறிவியல் செயல் விளக்கம் ஆகிய தலைப்புகளில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அறிவியல் வல்லுநர்கள் செயல் விளக்கம் அளிக்கவுள்ளனர். தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமானது வெள்ளிக்கிழமை மாலை நிறைவு பெறுகிறது. இந்த முகாமில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் கோளரங்கத்தின் சார்பில் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai