நாளை மகளிர், ஆடவர் கபடி போட்டி
By DIN | Published on : 25th April 2019 03:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள கோவண்டகுறிச்சி ஊராட்சியில் வெள்ளிக்கிழமை ஆடவர் மற்றும் மகளிருக்கான தொடர் கபடி போட்டி நடைபெறுகிறது.
லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகேயுள்ளது கோவண்டகுறிச்சி ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள அரசன் திடலில் குரு சின்னாள் டேவிட் மார்டீன் மற்றும் டோமினிக் கபடி நினைவுக்குழு ஆகியவை இணைந்து வெள்ளிக்கிழமை ஆடவர், மகளிருக்கான கபடிப் போட்டி நடத்தவுள்ளது.
காலை 6 மணிக்கு பெண்களுக்கான கபடி போட்டியினை லால்குடி வருவாய் கோட்டாட்சியர் ஆர். பாலாஜி துவக்கி வைக்கிறார்.
வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு ஆண்களுக்கு தொடர் கபடி போட்டி நடைபெறுகிறது. நுழைவுக் கட்டணம் ரூ. 500. ஆடவருக்கான போட்டியினை டால்மியா சிமெண்ட் ஆலையின் பொது மேலாளர் எஸ். மகேஸ், துணை பொது மேலாளர் ஐ. சுப்பையா ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடக்கி வைக்கின்றனர்.