சுடச்சுட

  

  பதக்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து

  By DIN  |   Published on : 25th April 2019 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஆசிய தடகளப்போட்டியில் பதக்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 
  இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:   23ஆவது ஆசிய தடகளப்போட்டியில் திருச்சி மாவட்டம் முடிகண்டம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகள் கோமதி 800 மீ. ஓட்டத்தில் தங்கம் பதக்கமும், லால்குடி அருகே உள்ள வலிதியூர் பகுதியைச் சேர்ந்த  ராணுவ வீரர் ஆரோக்கிய ராஜீவ் 1600 மீ. கலப்பு தொடர் ஓட்டத்தில்  வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளனர். இவர்கள் இருவரும்  இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும், திருச்சி மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்னர்.  இதுபோன்று பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று சாதனைகளைப் படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai