பாரதிதாசன் பல்கலை. ஆய்வகத்தில் மாணவி தற்கொலை முயற்சி
By DIN | Published on : 25th April 2019 03:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆய்வகத்தில் மாணவி பாதரசத்தை குடித்து புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ஆத்மநாதன் மகள் சிவனேஸ்வரி (25). இவர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், முதுகலை வாழ்வியல் அறிவியல் 5ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், புதன்கிழமை காலை 11 மணியளவில், பல்கலைக்கழக ஆய்வகத்தில் சிவனேஸ்வரி பயிற்சி வகுப்பிலிருந்த போது, அங்கிருந்த பாதரசத்தை குடித்துள்ளார்.
இதைகண்ட சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவரை அழைத்துச் சென்று திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.நவல்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.