சுடச்சுட

  


   மனைவியிடம் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்திய வழக்கில் கணவரை  கோட்டை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருச்சி வரகனேரி பொன்னர் தெருவைச் சேர்ந்தவர் நித்யா(24). இவருக்கும் புதுக்கோட்டை மலையப்ப நகர் கார்த்திகேயன்(27) என்பவருக்கும் 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணமாகி ஒரு ஆண்டுகளுக்கு பிறகு நித்யாவிடம் வரதட்சிணை கேட்டு கணவர் கார்த்திகேயன், மாமனார் பரமசிவம், மாமியார் தனபாக்கியம் துன்புறுத்தியதால் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.  இந்நிலையில், கார்த்திகேயன் வனஜாதேவி என்ற பெண்ணை 2 ஆவதாக திருமணம் செய்துக் கொண்டதையறிந்த நித்யா மலையப்ப நகர் சென்று கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு நித்யாவை தாக்கியுள்ளனர்.  இதுகுறித்து நித்யா கொடுத்த புகாரின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கார்த்திகேயனை புதன்கிழமை கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai