சுடச்சுட

  


  திருச்சி மாவட்டத்தில் 33 அஞ்சல் நிலையங்களில் உள்ள ஆதார் அட்டை சேவை பயன்பாட்டை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார். 
  இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
  ஆதார் அட்டை  சேவையில் திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகம் மே 2018 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே சிறப்பாக பணி செய்ததை பாராட்டி சான்றிதழ் பெற்றுள்ளது. தற்போது இந்திய அளவில் இரண்டு மாதமாக முதல்நிலையில் சேவை செய்து வருகிறது.
  எனவே, திருச்சி தலைமை அஞ்சல் நிலையம், பாரத மிகுமின் நிறுவனம், அண்ணாநகர் துப்பாக்கி தொழிற்சாலை , கைலாசபுரம் ,  ஜாபர்ஷா தெரு கிளாக் டவர் , எடமலைப்பட்டிபுதூர் , பொன்மலை , அரியமங்கலம் , ஜமால் முகமது கல்லூரி , கே.கே.நகர் , காஜா நகர்,  குழுமணி , மேலகல்கண்டார் கோட்டை, திருச்சி படைக்கலன் வளாகம் , காட்டூர் பாப்பாக்குறிச்சி,  பேட்டைவாய்த்தலை , புதூர்,  தேசிய தொழில்நுட்பக் கல்லூரி , ராம்ஜிநகர், சோமரசம்பேட்டை , தென்னூர் , தெப்பக்குளம் , தில்லைநகர் , திருச்சி விமானநிலையம் , மலைக்கோட்டை , ஜங்ஷன் ரயில்நிலையம் , திருவெறும்பூர் , உறையூர் , லால்குடி , பூவாளூர் உள்ளிட்ட 33 அஞ்சல் நிலையங்களில் ஆதார் அட்டை வேண்டி கட்டணமில்லாமல் பதிவு செய்யலாம். ஆதார் அட்டையில் உள்ள திருத்தங்களை ரூ.50 கட்டணத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai