சுடச்சுட

  


   மணப்பாறை அடுத்த பாரதியார் நகர் பகுதியில் இருந்து கோவில்பட்டி செல்லும் சாலையில் ஆபத்தான மின்கம்பம் உள்ளது  .
  விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது. 
  திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாரதியார் நகர் பகுதியிலிருந்து மில் பழைய காலனி, புது காலனி, தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி மற்றும் கோவில்பட்டி சாலைக்கு செல்லும் பிரதான வண்டி பாதை உள்ளது. பாதையின் ஓரங்களில் உள்ள மின் கம்பங்கள் சிமென்ட் மேற்பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானலும் விழுந்துவிடலாம் என்ற நிலையில் உள்ளது.  இதுகுறித்து பலமுறை இப்பகுதி மக்கள் மின்வாரியத்திற்கு புகார் அளித்தும், மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லையாம். விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai