சுடச்சுட

  

  திருவானைக்கா, ஸ்ரீரங்கம் பகுதியில் இன்று குடிநீர் நிறுத்தம்

  By DIN  |   Published on : 26th April 2019 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  குடிநீர் உந்துகுழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணி நடைபெறவுள்ளதால் திருவானைக்கா, ஸ்ரீரங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக, அவர் கூறியது: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட ஸ்ரீரங்கம் ஆளவந்தார் படித்துறை நீர்சேகரிப்பு நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கா பகுதிகளுக்கு செல்லும் 600 எம்எம் குடிநீர் உந்துகுழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணி நடைபெறவுள்ளதால் ஸ்ரீரங்கம், திருவானைக்கா, மாம்பழச்சாலை, பெரியார் நகர், அம்மா மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஏப்.26) ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது. சனிக்கிழமை வழக்கம்போல குடிநீர் விநியோகம் நடைபெறும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai