சுடச்சுட

  

  தேசியக் கல்லூரியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

  By DIN  |   Published on : 26th April 2019 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  திருச்சி தேசியக் கல்லூரியில், மாநகராட்சியுடன் இணைந்து கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமை மே 1 ஆம் தேதி தொடங்குகிறது.
  இது குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் தெரிவித்திருப்பது : மே 1 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் 6 வயது முதல் 21 வயது வரையுள்ள மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். இதில் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ், தடகளம், யோகா, ஏரோபிக்ஸ் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 
  விளையாட்டுகளில் பயிற்சியளிக்கப்படும். 
   இந்த முகாமில் கலந்து கொள்வதற்கான விண்ணப்ப படிவம், தேசியக்கல்லூரி உடற்கல்வியியல் துறையிலும், திருச்சி மாநகராட்சி அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும்  விவரங்களைப் பெற 9994118478 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai