சுடச்சுட

  


  கள்ள நோட்டு மாற்றி தருமாறு மிரட்டிய வழக்கில் பொம்மை துப்பாக்கியுடன் போலி வழக்குரைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
  திருச்சி புத்தூர் ஆபீசர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் சிராஜ்தீன்(52). இவரை நத்தர்ஷா பள்ளி வாசல் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த முகமது ஜாபர்அலி(30) என்பவர் சந்தித்து தான் வழக்குரைஞர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, கள்ள நோட்டை மாற்றி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு சிராஜ்தீன் மறுப்பு தெரிவிக்க, துப்பாக்கியை காட்டி முகமது ஜாபர் மிரட்டியுள்ளார். 
  இதுகுறித்து சிராஜ்தீன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த முகமதுஜாபர் அலியை வியாழக்கிழமை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சட்டப்படிப்பு படிக்காமல் தன்னை வழக்குரைஞர் என சொல்லி பொம்மை துப்பாக்கியை வைத்து பலரை மிரட்டியது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து பொம்மை துப்பாக்கி மற்றும் ரூ. 6900 மதிப்பிலான ரூ.200, ரூ.100 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai