சுடச்சுட

  


  ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில்  சித்திரைத் தேரோட்டத்திற்காக வியாழக்கிழமை காலை தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. மே 3 இல் தேரோட்ட விழா நடைபெறவுள்ளது.
  கி.பி. 1383 ஆம் ஆண்டு விஜயநகர சங்கமகுல மன்னனான இரண்டாம் ஹரி ஹரனின் மகன் விருப்பன் பெயரில் நடைபெறும் இந்த சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டிற்கான சித்திரைத் திருவிழாவுக்காக வியாழக்கிழமை காலை கோயிலில் உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடி படம் ஏற்றப்பட்டது. இதற்காக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு கொடி மண்டபத்திற்கு 3.30 மணிக்கு வந்தடைந்தார். தொடர்ந்து கருட வாகனம் வரையப்பட்ட கொடி படம் மீன லக்னத்தில் 4.30 மணி முதல் 5.15 மணிக்குள் வேதமந்திரங்கள் முழங்க தங்கக் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 6.15 மணிக்கு கண்ணாடி அறைக்கு சென்று சேர்ந்தார் நம்பெருமாள். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின்னர் இரவு 9 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து யாக சாலைக்கு புறப்பட்டு அங்கு திருமஞ்சனம் கண்டருளி வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறைக்கு சென்றடைகிறார் நம்பெருமாள். மாலை கற்பக விருட்சத்தில் எழுந்தருளுகிறார். மே 5 ஆம் தேதி வரையிலான 11 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிதருகிறார். 
  விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai