சுடச்சுட

  


   வரும் 2019-2020 கல்வியாண்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் சேர மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
  விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் சாதனை படைக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ்நாடு  விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில், விளையாட்டு விடுதிகளை அமைத்து, தங்குமிடம், உணவுடன் கூடிய விளையாட்டுப் பயிற்சிகளை அளித்து வருகிறது. 
  இவற்றுக்கான தேர்வு சென்னை, ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் மே  21 ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. 
  இவற்றில் பங்கேற்க விரும்பும் தகுதியுடைய மாணவ, மாணவியர் உரிய விண்ணப்பப் படிவத்தை,  முகவரியில் பதிவிறக்கம் செய்து, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க மே 20 ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களைப் பெற 
   இணைய தளத்திலும் அல்லது மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலரை (அண்ணா விளையாட்டரங்கம்) 0431-2420685 என்ற தொலைபேசியிலும் தொடர்புகொள்ளலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai