சுடச்சுட

  


  திருவானைக்கா பன்னிரு திருமுறை வார வழிபாட்டு கழகத்தின் 50 ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை திருவானைக்கா கோயிலில் கொண்டாடப்பட்டது.
  இந்த விழாவையொட்டி3 நாள்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. விழாவை வெள்ளிக்கிழமை மாலை திருவானைக்கோயில் உதவி ஆணையர் கோ.ஜெயப்பிரியா விழாவைத் தொடங்கி வைத்தார். இதில், தலைவர் இராம.மு. கதிரேசன் தலைமையில் கோயில் ஓதுவர் ஜெகன், புவனேஸ்வரி மற்றும் திலகவதி ஆகியோரின் சொற்பொழிவு நடைபெற்றது. 
  சனிக்கிழமை மாலை சொற்பொழிவு அரங்கமும், ஆய்வரங்கமும்  நடைபெறவுள்ளது.
  நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை அறுபத்து மூவர் நாயன்மார்கள் புறப்பட்டு நான்காம் பிரகார வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai