ரயிலில் அடிபட்டு பெண் பலி
By DIN | Published on : 27th April 2019 02:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பசு மாட்டை தேடிச் சென்ற பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
திருச்சி முத்தரசநல்லூர் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த குமார் மனைவி சாந்தி(47). இவர், வெள்ளிக்கிழமை காலை பசு மாட்டை தேடி சென்றவர் வீட்டிற்கு வெகுநேரமாகியும் வரவில்லையாம். உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தில் இறந்து கிடப்பதாக அவரது உறவினர்களுக்கு தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி ரயில்வே போலீஸார் சாந்தியின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.