மே 1 முதல் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில், மே 1 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள கோடைகால விளையாட்டு முகாமில் சேரலாம் என மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.  


திருச்சி அண்ணா விளையாட்டரங்கில், மே 1 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள கோடைகால விளையாட்டு முகாமில் சேரலாம் என மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.  
திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மே 1 ஆம் தேதி முதல் கோடை கால பயிற்சி முகாம் தொடங்கவுள்ளது. காலை 6.30  முதல் 8.30, மாலை  4.30 முதல் 6.30 வரையில் மே 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள முகாமில் 16 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். பயிற்சி முடிந்தபின்னர், சான்றுகளும் பரிசுகளும் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் அண்ணா விளையாட்டரங்கில் நேரடியாக சென்று பயிற்சியில் பங்கேற்று பயன் பெறலாம். 
சிறப்பு பயிற்சி முகாம் : திறனாய்வு கண்டறியும் திட்டம்  (2017-18) சார்பில் தடகளப் போட்டிகளில் திருச்சி, லால்குடி, முசிறி கல்வி மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. அதில்  6 விளையாட்டுப் போட்டிகளிலும் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 5 நாள் (இருப்பிடமில்லா) சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சிகள் ஏப் 29 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை திருச்சி கல்வி மாவட்டத்துக்கு அண்ணா விளையாட்டரங்கிலும், , முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்  நடைபெறவுள்ளது. 
இருப்பிடப் பயிற்சி முகாம் : கல்வி மாவட்டங்களில் (திருச்சி, முசிறி, லால்குடி) 5 நாள்கள்  நடைபெறும் பயிற்சி முகாமில் சிறப்பாக தேர்வு பெறும் 180 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 15 நாள்கள் இருப்பிடப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 
அண்ணா விளையாட்டரங்கில் மே 5 முதல் 18 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ள இந்த பயிற்சி முகாமில், கல்வி மாவட்டத்துக்கு 60 பேர் வீதம் 3 கல்வி மாவட்டத்திலும் தேர்வாகும் 180 பேருக்கு இருப்பிடப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 
இந்த பயிற்சி முகாமில் மாணவ, மாணவியருக்கு ஊட்டச்சத்து பானங்களும் வழங்கப்படும். 
இப்பயிற்சிகள் குறித்து மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளை யாட்டு அலுவலர் அலுவலகத்தை 0431-2420685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com