சுடச்சுட

  

  இலவசக் கல்வி பெற ஆதரவற்ற  குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

  By DIN  |   Published on : 28th April 2019 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  திருச்சியை அடுத்த திருப்பராய்த்துறையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா குடிலில் தாய், தந்தை இல்லாத மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெறுவதால் தகுதியானோர் பயன்பெறலாம்.
  இதுதொடர்பாக, ஸ்ரீ ராமகிருஷ்ணா குடில் தலைவர் கருப்பையா கூறியது:
  திருப்பராய்த்துறையில் உள்ள ராமகிருஷ்ணா குடிலானது 67 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவற்ற சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்காக சேவை புரிந்து வருகிறது. தாய், தந்தை இல்லாத, ஆதரவற்ற சிறார்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தனர். 2010ஆம் ஆண்டு முதல் தாயோ அல்லது தந்தையோ இருவரில் ஒருவர் இல்லாமல், படிக்க செலவிட முடியாத மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இங்கு தொடக்கப் பள்ளியும், உயர்நிலைப் பள்ளியும் உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெறும். கடந்தாண்டு முதல் மேல்நிலைக் கல்வியை தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  10ஆம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் மாணவர்களை சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரியில் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இங்கு சேரும் மாணவர்களுக்கு உணவு, உடை, மருத்துவம், இருப்பிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. கல்வியுடன் ஓவியம், நாடகம், யோகா, கணினி பயிற்சி வகுப்புகளும் அளிக்கப்படும்.
  2019ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் தகுதியானவர்கள் திருப்பராய்த்துறையில் உள்ள ராமகிருஷ்ணா குடிலை நேரில் அணுகி சேர்க்கை படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0431- 2614235, 2614548, 94423-52770, 94435-77235 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai