சுடச்சுட

  


  லால்குடி அருகே இ.வெள்ளனூரில் ஸ்ரீசற்குருநாதர் மகா முனிவர் 107ஆவது ஆண்டு குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
  ஸ்ரீசற்குருநாதர் ராஜயோக மடாலயத்தில் சிவப்பிரகாச சுவாமிகள்  தலைமையில்   குருபூஜை விழா நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் எல்லநள்ளி ஜெயப்பிரகாஷ் சுவாமிகள் முன்னிலையில் காலையில் கொடியேற்றமும், அருள்மிகு விநாயகருக்குசிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர், யாகசாலை பூஜைகளும், தீபாராதனைகளும், திருமுறை அர்ச்சனையும், கூட்டு வழிபாடும் நடைபெற்றன. குருபூஜை விழாவில் மல்லையா சுவாமிகள், சீத்தாராம் பாகவதர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai