சுடச்சுட

  


  திருச்சி வெல்டிங் கழகத்தின் சார்பில், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு வெல்டிங் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.
  இதுதொடர்பாக, இந்திய வெல்டிங் கழகத்தின் தெற்கு மண்டல திட்ட இயக்குநர் எல். பிரவீன்குமார் கூறியது:
  திருச்சி வெல்டிங் கழகத்தின் சார்பில் பொறியியல் கல்லூரிகளில் மூன்றாமாண்டு, பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்காக மே 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை இந்த பயிற்சி வகுப்பு நடைபெறும். மாலை நேர பயிற்சி வகுப்புகளாக நடைபெறும் இந்த பயிற்சியில், பற்றிணைப்பு முறைகள், ஆய்வு சோதனை முறை, பற்றிணைப்பு குறைபாடுகள், அடிப்படை உலோகவியல் மற்றும் வெல்டிங் தொழில்நுட்பம் குறித்த பல்வேறு தலைப்புகளில் பேராசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் வெல்டிங் கழகத்தை 0431-2554811 என்ற தொலைபேசி எண்ணிலோ, மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai