Enable Javscript for better performance
முத்தரையர் எண்ணிக்கை: மீண்டும் கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    முத்தரையர் எண்ணிக்கை: மீண்டும் கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 28th April 2019 03:20 AM  |   அ+அ அ-   |    |  


    தமிழகத்தில் கோடிக்கணக்கில் முத்தரையர்கள் வாழும் சூழலில் கணக்கெடுப்பில் ஏற்பட்ட தவறுதலால் எண்ணிக்கை மதிப்பீடு  
    தவறாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக முத்தரையர் எழுச்சி சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு வழங்கு  பெயரில் முத்தரையர்கள் வசித்து வருகின்றனர். 
    இந்நிலையில்,  தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு சார்பில் தமிழகத்தில் முத்தரையர் எண்ணிக்கை 15 லட்சம் என தவறுதலாக கணக்கெடுத்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. 
    இதனால், அரசு சலுகைகள் பெறுவதிலும், அரசியல் கட்சிகளிடம் உரிய பிரதிநிதித்துவம் பெறுவதிலும் பல்வேறு 
    சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. 
    எனவே, முத்தரையர்கள் தொடர்பாக மீண்டும் சரியான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள பேரவைத் தொகுதி வாரியாகவும், மக்களவைத் தொகுதி 
    வாரியாகவும் உரிய விவரங்களை வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai