சுடச்சுட

  

  விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை: மே 10-இல் மாவட்ட அளவில் தேர்வு

  By DIN  |   Published on : 28th April 2019 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு விடுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  இதில்,  பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு  மே 10ஆம் தேதி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
  இந்த விடுதிகளில் சேர விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2019-2020ஆம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்திடவும், விளையாட்டு விடுதி தொடர்பான விவரங்களை பெறவும்  இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியில் மே 7ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்  என தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai