சுடச்சுட

  


  திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து எலி மருந்து சாப்பிட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். 
  திருச்சி அரியமங்கலம் முல்லை நகரைச் சேர்ந்த முரளிதரன் மகள் மகாலட்சுமி(18). இவருக்கு திருமணம் செய்ய முடிவு எடுத்து இவரது பெற்றோர் வரன் பார்த்து வந்துள்ளனர். இதற்கு மகாலட்சுமி மறுப்பு தெரிவித்து மன உளைச்சலில் இருந்துவந்துள்ளார். 
  இந்நிலையில்,  ஏப்ரல் 24ஆம் தேதி மகாலட்சுமி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். வீட்டில் மயங்கி கிடந்தவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து அரியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai