சுடச்சுட

  


  ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சமூகம் புறக்கணிக்கக் கூடாது என சோல்வினர்ஸ் அறக்கட்டளை நிறுவனர் கே. டார்த்தி அறிவுறத்தினார்.
  இறகுகள் தொண்டு நிறுவனத்தின் சார்பில், ஹெச்ஐவியுடன் வாழும் மக்களுக்கான திட்டத்தின் கீழ் 80 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
  திருச்சி டிஇஎல்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பொள்ளாச்சியைச் சேர்ந்த சோல்வினர்ஸ் அறக்கட்டளை நிறுவனர் கே. டார்த்தி பேசியது: ஹெச்ஐவி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் என்றாலே சமூகத்தில் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது. 
  பாலியல் குறித்த புரிந்துணர்வு இல்லாமலும், கணவரது தவறான பழக்கத்தாலும் பல குடும்பங்களில் பெண்கள், குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்பட நேரிடுகிறது. ஏதுமறியாத குழந்தைகளை புறக்கணிக்கக் கூடாது. 
  பிற நோய்களை போன்று ஹெச்ஐவி நோய்க்கும் உரிய மருந்துகள் வந்துவிட்டன. வாழ்நாளை நீடிக்கலாம். எனவே, இத்தகைய குழந்தைகளுக்கு கல்வியும், சத்து உணவுகளும் அவசியமானது. திருச்சியில் 80 குடும்பங்களை தத்தெடுத்து அந்த பணியை செய்து வரும் இறகுகள் நிறுவனத்தின் பணி போற்றுதலுக்குரியது என்றார்.
  பள்ளித் தலைமையாசிரியை சு. டெய்சிராணி, ஆயர் அருள் ஆனந்தம், உதவிப் பேராசிரியர் திருமலைவாசன், இறகுகள் நிறுவனர் ஜே. ராபின் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
  நிகழ்ச்சியில், ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட 80 குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான உணவு வகைகள், சத்துணவுகள், மருந்துகள், குழந்தைகளுக்கு கல்வி உதவி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai