சுடச்சுட

  

  திருச்சியில் உரத்த சிந்தனை, வாசக எழுத்தாளர் சங்கம் மற்றும் நம் உரத்த சிந்தனை தமிழ் மாத இதழ் ஆகியன  சார்பில் 3 நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  விழாவுக்கு உரத்த சிந்தனை, வாசக எழுத்தாளர் சங்கத் தலைவர் பா. சேதுமாதவன் தலைமை வகித்தார்.  நகைச்சுவை மன்ற செயலாளர் சிவகுருநாதன், மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம், லேணா தமிழ்வாணன் ரவி, பேராசிரியை ஜமுனா சிவாஜிராவ்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
  திருச்சி மாவட்ட நூலக அலுவலர்  அ. பொ. சிவக்குமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார்.  
  விழாவில் சிறப்புரையாற்றிய அமுதசுரபி இதழ் ஆசிரியர் கலைமாமணி முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் 3 நூல்களையும் வெளியிட்டார். 
  அதில், சி.தங்கவேல் எழுதிய "வீடும் நாடும் " என்ற நூலை எழுத்தாளர் வை.தியாகராசனும்,  கி.நடராஜன் எழுதிய "வழி தெரியாப் பயணம்" என்ற கவிதை நூல் மற்றும் " எதிரும் புதிரும் புதிர்க் கணக்குகள் " என்ற நூல்களை கவிஞர் ஆர்.நாச்சிமுத்துவும், பாரதி மேல்நிலை பள்ளி முதல்வர் கா. பாலகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.    
  பிறகு நடைபெற்ற திறனாய்வரங்கத்தில்  கவிஞர் க. மாரிமுத்து எழுதிய "மகளிர் 400 ' நூலை,  பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை  பேராசியை முனைவர் நா. முருகேஸ்வரியும்,   முனைவர் ஆர்.கேத்தரின் ஆரோக்கியசாமி எழுதிய "விடியும் நேரம்'  என்ற நூலை, பேராசிரியர் திருமண மேடு ப . பிரபு  மற்றும்  நம் உரத்த சிந்தனை ஏப்ரல் மாத இதழை,  உரத்த சிந்தனை இணைச் செயலாளர் கவிஞர் வாளசிராமணி க. செல்வராசன் ஆகியோர்  மதிப்புரை செய்தனர்.  
  நிகழ்ச்சியில் உரத்த சிந்தனை சங்க பொதுச் செயலாளர் உதயம் ராம், திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் வீ.கோவிந்தசாமி, உரத்த சிந்தனை செயற்குழு உறுப்பினர்  வி.ராம்குமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியை உரத்த சிந்தனை சங்க செயலாளர்  ஆர்.அப்துல் சலாம் தொகுத்து வழங்கினார். 
   முன்னதாக, செயற்குழு உறுப்பினர் கே. வி. தியாகசாந்தன் வரவேற்றார். நிறைவாக  பொருளாளர் ஆர்.விஜயலட்சுமி நன்றி கூறினார். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai