இடையாற்றுமங்கலத்தில் அதிகரிக்கும் தொண்டை நோய்: மருத்துவ முகாம் நடத்தக் கோரிக்கை

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள இடையாற்றுமங்கலம் கிராமத்தில் தொண்டை நோய் பாதிப்பு அதிகரித்து

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள இடையாற்றுமங்கலம் கிராமத்தில் தொண்டை நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது.  
லால்குடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார், மனைவி லதா குழந்தைகள் காவியா (18), சுஸ்மிதா (16), தனுஷ் (14) ஆகியோர் உள்ளனர்.  ஏற்கெனவே காவியா, தனுஷ் ஆகிய இருவரும் தொண்டை நோய் பாதிப்பினால் அறுவைச் சிசிச்சை மேற்கொண்ட நிலையில், தற்போது சுஸ்மிதாவுக்கு தொண்டை நோய் பாதிப்படைந்து லால்குடி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
மேலும், லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  9 ஆம் வகுப்பு பயின்றுவரும் இதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் மகன் நித்திஸ் (15) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு  தொண்டை வலி, மூக்கில் ரத்தம் வடிதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் கடந்த 11 மாதங்களில் லால்குடி அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொண்டை அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு தற்போது நலமுடன் உள்ளனர். 
இந்த ஊராட்சியில் உள்ள எங்கள் தெருவில் உள்ளவர்களுக்கு  குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு மட்டுமே இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதெனவும் எனவே, இப்பகுதியில் மருத்துவ பரிசோதனை  முகாம் நடத்த வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com