திருச்சி மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகள்

 திருச்சி மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் பட்டியலை மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ளது. 

 திருச்சி மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் பட்டியலை மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ளது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
அரசு விதிமுறைகளின் படி மட்டுமே பள்ளிகள் நடைபெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்விதுறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக,  மாவட்டத்தில் அரசு அனுமதி (அங்கீகாரம்) பெற்று இயங்கும் பள்ளிகள் குறித்த பட்டியல் வெளியிடப்படுகிறது.  
அதில், திருச்சி  தில்லை நகர் 11ஆவது குறுக்குத்தெரு,  ராமசந்திரபுரத்தில் உள்ள கங்காரு  மழலையர் பள்ளி, உறையூர் வாண்டர்ன் புளு  மழலையர் பள்ளி, பாலக்கரை ஆழ்வார்த்தோப்பு ஷான்ஸ் மழலையர் பள்ளி, சங்கிலியாண்டபுரம்,  ஜோசப் மழலையர் பள்ளி, சுப்ரமணியபுரம்,  ஹைவேஸ் காலனி, மேரி டிப்பனி  மழலையர் பள்ளி, செந்தண்ணீர்புரம்  கோவலன் தெரு,  நந்தனா கிட்ஸ் மழலையர் பள்ளி,  வரகனேரி தனரத்தினம் நகர், கமலா பாட்டி கிட்ஸ்  மழலையர் பள்ளி ஆகியவற்றில் பிரீ.கே.ஜி., எல்.கே.ஜி.,  யூ.கே.ஜி. ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் அனுமதி பெற்றுள்ளன. 
அதேபோல, அந்தநல்லூர் வட்டாரத்தில் ஸ்ரீரங்கம்,  தோப்பு ஸ்ரீராமபுரம் ராயர் இயர்லி டேஸ்  மழலையர் பள்ளி, முத்தரசநல்லூர், முருங்கப்பேட்டை குட் செப்பர்டு  மழலையர் பள்ளி, திருவெறும்பூர் வட்டாரத்தில்  எறும்பீஸ்வரர் நகரில் செயல்படும்  மழலையர் பள்ளி,  துவாக்குடி சத்யா மழலையர் பள்ளி, மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் கே.கே. நகர்,  எம்.டி.எஸ். குருகுலம் மழலையர் பள்ளி, க்ளாவ்ட் லைன் 
மழலையர் பள்ளி, ஸ்ரீனிவாசா நகர் அச்சுஸ் மழலையர் பள்ளி,  லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், ஆசாரி தெருவில் செயல்பட்டு வரும் ரெயின்போ மழலையர் பள்ளி, முசிறி டவுன் அமலா  மழலையர் பள்ளி ஆகியவை பிரீ.கே.ஜி., எல்.கே.ஜி. ,  யூ.கே.ஜி. ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் அனுமதி பெற்றுள்ளன.
மேலும்,  திருச்சி மாவட்டத்தில் பிரீ.கே.ஜி. முதல் யூ.கே.ஜி. வரையிலும், எல்.கே.ஜி முதல் 5 ஆம் வகுப்பு வரையிலும் அரசு அனுமதி பெற்ற மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் குறித்த பட்டியல் தொடக்கக் கல்வித்துறையால் தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் நலன் கருதி  ‌t‌i‌r‌u​c‌h‌i‌r​a‌p‌p​a‌l‌l‌i.‌n‌i​c.‌i‌n என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com