வெளிநாடுகளில் மிகக்குறைந்த செலவில் மருத்துவம் படிக்கலாம்

இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கு ஆகும் செலவை விட வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க ஆகும் செலவு மிகவும்

இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கு ஆகும் செலவை விட வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க ஆகும் செலவு மிகவும் குறைவு என்றார் சரஸ்வதி ஆன்லைன்.காம் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி கங்குலி.
சரஸ்வதி ஆன்லைன்.காம் ஏற்பாட்டில் சீனாவில் உள்ள மருத்துவப் பல்கலைக் கழகத்தில் படித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி பி.எல்.ஏ.ரத்னா ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு தலைமை வகித்து அவர் பேசியது:   சரஸ்வதி ஆன்லைன் வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகளை நடுத்தர குடும்பத்தினருக்கு ஏற்படுத்தி தருகிறது. 2004-இல் தொடங்கப்பட்ட சரஸ்வதி ஆன்லைன் மூலம்  இதுவரை 6 ஆயிரம் பேர் மருத்துவம் படித்து முடித்துள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 2500க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.வெளிநாடுகளில் படித்தாலும் இந்திய மருத்துவர்களால் இந்தியக் கல்வி முறையில் தான் மருத்துவப் படிப்பு கற்றுக்  கொடுக்கப்படுகிறது. வெளிநாடுகளில் படிப்பை முடித்த பிறகு இந்தியாவில் அதற்கான தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவும் பயிற்சியளித்து சிறந்த மருத்துவ மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்றார்.
நிகழ்ச்சிக்கு மருத்துவர்கள் வி.ஜெ.செந்தில், ஆர்.கோவிந்தராஜன், பி.பத்மப் பிரியா, கே.கே.சலீம், சீனாவின் மருத்துவப் பல்கலைக்கழக துணைமுதல்வர் உத்தம் உதயன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, திருச்சியில் செயல்பட்டு வரும் ஆர்த்தி சர்வதேச கல்வித் தகவல் மையத்தின் தமிழகப் பொறுப்பாளர் வி.அண்ணாதுரை வரவேற்றார். இறுதியாக எம்.ராமநாதன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com