சுடச்சுட

  

  விடுமுறை காலத்தை முன்னிட்டு திருச்சி தலைமை அஞ்சலகத்தில் கோடை பெக்ஸ் 2019 சிறு அஞ்சல் தலை கண்காட்சி நாளை( மே 1ஆம் தேதி) தொடங்குகிறது.
  இதுகுறித்து திருச்சி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ஆர்.கணபதிசுவாமிநாதன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:   
  விடுமுறை காலத்தை முன்னிட்டு திருச்சி தலைமை அஞ்சலகத்தில் கோடை பெக்ஸ் 2019 என்கிற சிறு அஞ்சல் தலை கண்காட்சி அஞ்சல் சேகரிப்பு நிலையத்தில் நாளை( மே1 ஆம் தேதி) தொடங்கப்படவுள்ளது. பல்வேறு தலைப்புகளில் திருச்சி, தஞ்சாவூர், ஸ்ரீரங்கம் கோட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட அஞ்சல் தலைகள் இக்கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 
  மேலும், மே மாதம் வாரந்தோறும் புதன்கிழமைகளில் அஞ்சல்தலை சேகரிப்பு சம்பந்தமான கோடை முகாம் நடைபெறும். எனவே பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai