சுடச்சுட

  

  துறையூர் பேருந்து நிலையத்தில் பெண் கைப் பையில் வைத்திருந்த 4 பவுன் எடையுள்ள புதிய தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 
  துறையூர்  அருகேயுள்ள நக்கசேலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி பாப்பாத்தி(65). இவர் திங்கள்கிழமை  துறையூர் பெரிய கடைவீதியில் உள்ள ஒரு நகைக் கடைக்கு சென்று 4 பவுன் தங்கச் சங்கிலியை  வாங்கி கைப்பையில் வைத்துக் கொண்டு துறையூர் பேருந்து நிலையம் சென்றார். பேருந்துக்காக காத்திருந்த அவர்  நக்கசேலம் செல்லும் பேருந்தில் ஏறி கைப்பையைப் பார்த்த போது  அதிலிருந்த தங்க நகைப் பையை காணாததால் அதிர்ச்சியடைந்தார். துறையூர்  காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.  துறையூர் காவல் நிலையத்தில் போலீஸார் பற்றாக்குறை இருப்பதால் துறையூர் பேருந்து நிலையத்தில் உள்ள காவலர் அறை பூட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai