சுடச்சுட

  

  மே தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என ஆட்சியர் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
  இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
  வரும் புதன்கிழமை மே தினம் கொண்டாடப்படவுள்ளது. எனவே, சில்லரை மதுபான விற்பனை விதிகளின்படி அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும். திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை டாஸ்மாக் கடைகள், பார்கள், மனமகிழ் மன்றங்கள், தனியார் ஹோட்டல்களில் மது விற்பனை செய்யும் கூடங்கள், மது அருந்தும் கூடங்கள், உரிமம் பெற்று மது விற்பனை செய்யும் கடைகள் என அனைத்திலும் மது விற்பனை செய்யக் கூடாது. இந்த உத்தரவை மீறி மே தினத்தன்று யாரேனும் மதுக்கடைகளை திறந்தாலோ, மது விற்பனை செய்தாலோ தொடர்புடையோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai