மீண்டும் பாஜக ஆட்சியே அமையும்: ஜி.கே. வாசன்

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியே அமையும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியே அமையும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
திருச்சிக்கு திங்கள்கிழமை வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
வட இந்தியாவில் பாஜக-வுக்கு அமோக வரவேற்பு உள்ளது.  தென்னிந்தியாவில் மாநில கட்சிகளுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. பெரும்பாலான மாநில கட்சிகள் பாஜக ஆட்சிக்கு வருவதற்கே ஆதரவை தரும். மாநிலக் கட்சிகள் ஆதரவு இல்லாவிட்டாலும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும். தமிழகத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளே பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும். தஞ்சாவூரில் தமாகா-வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக இருகட்டங்களாக பிரசாரம் மேற்கொள்ளவுள்ளேன். 
டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 3 அதிமுக எம்எல்ஏ-க்கள் மீதான புகாரில், சட்டப்பேரவைத் தலைவர் சட்டப்படி தனது கடமையை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. 
மதுரை ஆட்சியர் மாற்றப்பட்டிருப்பதே தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறது என்பதற்கு சான்று. 
அண்மையில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தமிழக அரசு உரிய உதவிகளை செய்ய வேண்டும். குழந்தைகள் கடத்தல், விற்பனைக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும். குழந்தைகள் தத்தெடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும். 
கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதாக அந்த மாநில அரசு கூறி வருகிறது. எனவே, காவிரியில் தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை காரணமாகக் கூறி தாமதிக்காமல் தேர்தல் ஆணையம் தலையிட்டு தீர்வு காண வேண்டும். நேந்திரன் வாழை விலை வீழ்ச்சியை தடுக்க அரசே குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.  பயங்கரவாத செயல்களை ஒடுக்க இந்தியா எப்போதும் துணை நிற்க வேண்டும் என்றார் அவர்.
பேட்டியின்போது, மாவட்டத் தலைவர்கள் நந்தா கே. செந்தில்வேல், திருச்சி குணா, கே.வி.ஜி. ரவீந்திரன், விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com