முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் மூவர் கைது
By DIN | Published On : 04th August 2019 03:27 AM | Last Updated : 04th August 2019 03:27 AM | அ+அ அ- |

திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட மூவர், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்
முசிறி காவிரியாற்றுப் பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்ட கரூர் விஜயகுமார் (41), கீழகுட்டப்பட்டி ரகுபதி (23), திருச்சி மாவட்டம், எரகுடி ராஜேந்திரன் (38) ஆகிய மூவரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர். தொடர் குற்றங்களில் ஈடுபட்ட மூவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் பரிந்துரைத்தார். இதன் பேரில், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இதையடுத்து சிறையிலுள்ள விஜயகுமார், ரகுபதி, ராஜந்திரன் ஆகியோரிடம், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவின் நகல் வழங்கப்பட்டது.