Enable Javscript for better performance
சந்திரயான் 2: ஓரிரு மாதங்களில் துல்லிய புகைப்படங்கள் கிடைக்க வாய்ப்பு: ஆய்வாளர் தகவல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி

    சந்திரயான் 2: ஓரிரு மாதங்களில் துல்லிய புகைப்படங்கள் கிடைக்க வாய்ப்பு: ஆய்வாளர் தகவல்

    By DIN  |   Published On : 04th August 2019 03:28 AM  |   Last Updated : 04th August 2019 03:28 AM  |  அ+அ அ-  |  


    நிலவுக்கு ஏவப்பட்ட சந்திராயன்-2 விண்கலத்தின் மூலம்,துல்லிய புகைப்படங்கள் கிடைக்கும் வாயப்பு ஏற்பட்டுள்ளது என்றார்  நிலவு ஆய்வாளர் பி.குமரேசன்.
    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலையுணர்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில்,  கிரக ஆய்வு-கோள் உயிரியல் எனும் தலைப்பில்  சனிக்கிழமை  ஆய்வுரையாற்றி மேலும் அவர் பேசியது:
     பூமியில் தோன்றிய ஒரு செல் உயிரினங்கள் முதல் மனிதன் வரை நடைபெற்ற பரிணாமம் குறித்து நாள்தோறும் ஆய்வு நடத்தப்பட்டுதான் வருகிறது. 
    அதுபோல், பூமியில் உயிரினங்கள் உள்ளது போன்று  வேற்று கிரகங்களிலும், நமது சூரியக் குடும்பத்திலுள்ள  இதர கிரகங்கள் குறித்தும் பல்வேறு நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான  விஞ்ஞான வளர்ச்சியும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பிரிட்டன் நாட்டின் கிரக உயிரியல் ஆராய்ச்சியாளர் லெவிஸ் டார்ட்நெல்,  செவ்வாய்க்கிரகம் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறார். 
    2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உயிரினங்கள் தோன்றியதற்கு முன்பே, 4 பில்லியன் ஆண்டுகளில் செவ்வாய்க்கிரகத்தில் உயிரினங்கள் உருவாகியிருந்ததாகவும்,  பின்பு அசாதாரண சூழலால்  அவை அழிந்ததற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்றும் அவர் தன் ஆய்வில் கூறியுள்ளார்.
     இந்த ஆய்வின் பேரில், வரும் 2020-ஆம் ஆண்டில் ப்ரெஞ்சு கயானாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு எக்சோமார்ஸ் எனும் விண்கலம் ஏவப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    மேலும், தொலையுணர்வுத் துறையின் மூலம், செவ்வாயின் வடதுருவம் நீர்த்தன்மை மூலக்கூறுகளும்,  தென்துருவத்தில் எரிமலை அதன் ஓடுபாதை, வழித்தடங்கள் இருப்பது தெரியவருகிறது. பூமியில் உயிரினங்கள் வாழவேண்டுமெனில், பச்சைவீடு விளைவு, ஓசோன் படலம், நிலையான புவிஈர்ப்பு விசை உள்ளிட்டவை அவசியம். 
    அவ்வகையில், செவ்வாய், வியாழன் கிரகத்தின் துணைக்கோள் ஐரோப்பா, சனி கிரகத்தின் துணைக்கோள் என்செல்டேஸ் ஆகிய கோள்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
     தொலையுணர்வுத் துறையின் மூலம் ஓர் இடத்துக்கு நேரில் செல்லாமலே அப்பகுதியில் எடுக்கப்படும் அதிநவீன புகைப்படத்தின் மூலம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளலாம். அதன்படி நிலவு, செவ்வாய் கிரகத்திலிருந்து அகச்சிவப்பு, புறஊதாகதிர் அலைவரிசையின் (ஹைபர் ஸ்பெக்டரம் இமேஜஸ்) அடிப்படையில் எடுக்கப்படும் புகைப்படத்தைக்கொண்டு, பல்வேறு ஆய்வுகள் தொலையுணர்வுத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
     இதன்மூலம், பூமியில் செல்ல முடியாத இடங்கள், உயிரினங்கள் மற்றும் கிரகங்களில் உள்ள தனிமங்கள், மூலக்கூறுகள் குறித்து துல்லியமாக ஆய்வு செய்ய முடியும். 
    சந்திராயன்-2 விண்கலத்தில் நாசாவை மிஞ்சும் அளவிற்கு இஸ்ரோ  0.4 முதல் 5 வரையிலான புறஊதா, அகச்சிவப்பு கதிர் அலைவரிசையில்,புகைப்படங்கள் எடுத்து அனுப்பும் அதிநவீன கருவிகளைப்பொருத்தியுள்ளது. 
    இந்த புகைப்படங்கள் ஓரிரு மாதங்களில் சந்திராயன் 2 -லிருந்து பெறப்படவுள்ளன. இப்புகைப்படங்கள் தொலையுணர்வுத் துறை ஆய்வுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
     வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதாக கூறப்பட்டாலும் அதுகுறித்து ஆய்வு மேற்கொள்வதற்கான விஞ்ஞான வளர்ச்சி, நிதியும் போதுமானதாக இல்லை.
     மேலும், மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை மூலம் பூம்புகார் பகுதியை ஆய்வு மேற்கொள்ள ரூ.8.5 கோடியை விடுவித்துள்ளது. 
    இந்த ஆய்வில், பாரதிதாசன் பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி, என்.ஐ.டி உள்ளிட்ட 13 பல்கலைகழகங்களைச் சேர்ந்த தொலையுணர்வுத்  துறைப்  பேராசிரியர்கள்,  மாணவர்கள்  ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார். 
    துறைத் தலைவர்  பேராசிரியர் கே.பழனிவேல் தலைமை வகித்தார். நிகழ்வை பேராசிரியர்  கே.சரவணவேல் ஒருங்கிணைத்தார். 
    பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவ-மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp