பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள்
By DIN | Published On : 09th August 2019 09:38 AM | Last Updated : 09th August 2019 09:38 AM | அ+அ அ- |

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி முதுகலை பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர்
க.துரையரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைக்கல்வி மையம் மூலம், தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொது நிர்வாகவியல், பொருளியல், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல், மனித வள மேலாண்மையியல், அறிவியல் புவியியல், தகவல் தொழில் நுட்பவியல், இயற்பியல், விலங்கியல், கணினி அறிவியல், தாவரவியல், வேதியியல், கணிதவியல், நூலகத்தகவல் அறிவியல், வணிகவியல் (கணினிப் பயன்பாட்டியல், வணிக மேலாண்மை, வங்கி மேலாண்மை) ஆகிய முதுகலை பாடங்கள் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்பில் (டிப்ளமோ) கணினி பயன்பாடு, காட்சி ஊடகம் மற்றும் தொடர்பு பாடங்களுக்கும் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை மாணவ, மாணவியர்
www.bdu.ac.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண்களை உள்ளிட்டு தெரிந்துகொள்ளலாம்.