திருச்சி என்ஐடி-யில் எம்எஸ்சி சேர்க்கை

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை தேர்வு (ஜாம்) மூலம் எம்எஸ்சி படிப்புகளுக்கான சேர்க்கை


திருச்சி: திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை தேர்வு (ஜாம்) மூலம் எம்எஸ்சி படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக, என்ஐடி இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் கூறியது:
திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப கழகமானது, இந்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ், இயங்கும் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனமாகும்.

2014ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடிய இக்கல்லூரியானது தேசிய நிறுவங்களுக்கான தரவரிசைக் கட்டமைப்பில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் மற்றும் ஒட்டுமொத்த பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் 10ஆவது இடம் வகிக்கிறது.

சிறந்த ஆய்வு நிறுவனமாக இருப்பதுடன் பல முன்னணி பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் தொழில்நுட்ப கல்வியை வழங்கி வருகிறது என்றார். 
சகல வசதிகளுடன் எழில்மிகு வளாகத்தில் 10 இளநிலை, 28 முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கி வருகிறது. குறிப்பாக கணிதவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணினி பயன்பியல் துறைகள் இரண்டாண்டுகள் படிக்கும் முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது.

முதுநிலைப் பிரிவில் கணிதவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதவியல் ஆகிய பாடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி) நடத்தும் தேசியளவிலான ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைத் தேர்வு (ஜாம்) மூலம் நடைபெறுகிறது. 

முதுநிலை கணினி அறிவியலுக்கான ஜாம் தேர்வு கணிதப் புள்ளியியலை சார்ந்து நடைபெறும். 

2020-21ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை 2020ஆம் ஆண்டு ஜாம் தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண்ணைக் கொண்டு நடைபெறும். 

இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் விண்ணப்பங்கள், மாணவர் சேர்க்கை மற்றும் முதுநிலை அறிவியல் படிப்புகளை வழங்கும் துறைகள் குறித்த விவரங்களுக்கு வலைதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com