சுடச்சுட

  

  சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து வியாழக்கிழமை நடைபெறுகிறது.
  பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சுதந்திர தின சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெறும். சுதந்திர தினத்தன்று நண்பகல் 12 மணிக்கு சிறப்பு வழிபாடு, அதனைத் தொடர்ந்து ஜாதி, மத பேதமற்ற, ஏழை, எளியோர், பணக்காரர் என்ற பாகுபாடற்ற பொதுவிருந்து நடைபெறுகிறது. 
  இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ-க்கள், அறநிலையத் துறை அலுவலர்கள், கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்கவுள்ளனர் என கோயில் இணை ஆணையர் கே.பி. அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai