சுடச்சுட

  

  சேஷாயி தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய நூலக தின விழா அண்மையில் நடைபெற்றது.  
  தேசிய நூலக தினத்தை யொட்டி சேஷாயி தொழில்நுட்ப கல்லூரியில் நூலக தின விழா கொண்டாடப்பட்டது.  இதனை, கல்லூரி முதல்வர் கே.விஜயகுமார் தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரி நூலக அலுவலர் எஸ். லட்சுமி கலந்து கொண்டு மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தால் படைப்புத் திறன், சுய முன்னேற்ற மேம்பாடு, கல்வி பயில, இலக்குகளை அடைய நூலகத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். கல்லூரி நூலகர் ஏ.பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார். நூலகத்துறை தலைவர் வி.விஜயலட்சுமி நன்றி தெரிவித்தார். இதில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai