சுடச்சுட

  

  மணப்பாறை தியாகேசர் ஆலை மேல்நிலைப் பள்ளியில் ஜேசிஐ இந்தியா சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு தேர்வு பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  ஜேசிஐ மண்டல இயக்குநர் கணேஷ்ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 8, 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 1,034 மாணவ மாணவிகள் பயிற்சி தேர்வில் கலந்துகொண்டனர். இதேபோல் ஜேசிஐ 23-வது மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் 6,255 பேர் இந்த வகையான பயிற்சி தேர்வைத் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ளனர். பள்ளியில் முதல்வர் எல்.அருளரசன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் முத்துக்குமார், லெட்சுமணன், கார்த்திக், ஜேசிஐ முன்னாள் தலைவர்கள் மணவை.ஜெ.ஸ்ரீதரன், ராஜா, துளசிமணி, செயலாளர்கள் பொன்.பாஸ்கரன், போஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai