சுடச்சுட

  

  மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஆக.26 முதல் மருத்துவ முகாம்

  By DIN  |   Published on : 14th August 2019 10:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் அனைத்து வட்டார மையங்களிலும் வரும் ஆகஸ்ட் 26 முதல் 16 நாள்களுக்கு நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார். 
  மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி, ஆகஸ்ட் 26 ஆம் தேதி உறையூர் எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி, ஆகஸ்ட் 27 ஆம் தேதி லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆகஸ்ட் 28 ஆம் தேதி திருவெறும்பூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆகஸ்ட் 29 ஆம் தேதி மருங்காபுரி-கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், ஆகஸ்ட் 30 ஆம் தேதி முத்தரநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி வளாகம், ஆகஸ்ட் 31 ஆம் தேதி சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடைபெறுகிறது.  
  செப். 3 ஆம் தேதி மணப்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செப்.  4 ஆம் தேதி மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செப். 5 ஆம் தேதி பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி, செப். 6 ஆம் தேதி துறையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செப். 7 ஆம் தேதி உப்பிலியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, செப். 9 ஆம் தேதி புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, செப். 11 கன்டோன்மென்ட் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி, செப். 12 ஆம் தேதி முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செப். 13 ஆம் தேதி வையம்பட்டி அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி, 
  செப். 14 ஆம் தேதி தாத்தயங்கார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன. 
  அடையாள அட்டை பதிவு இலவசம்: குழந்தைகளில் புதியதாக தேசிய அடையாள அட்டை பெறவிரும்புவோர் குழந்தையின் புகைப்படம், குடும்ப அட்டை நகல், பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவை கொண்டு வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai