புவி வெப்பமயமாதலை தடுக்காவிட்டால்  அடுத்த 50 ஆண்டுகளில் மனித இனம் அழிவை சந்திக்கும்

புவி வெப்பமயமாதலை தடுக்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளில் மனிதஇனம் அழிவைச் சந்திக்க நேரிடும் என்றார் சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஓசை காளிதாசன். 

புவி வெப்பமயமாதலை தடுக்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளில் மனிதஇனம் அழிவைச் சந்திக்க நேரிடும் என்றார் சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஓசை காளிதாசன். 
        திருச்சி பிஷப் ஹீபர் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பசுமைப்படை பொறுப்பாளர்களுக்கான கருத்தரங்கில் அவர் மேலும் கூறியது: 
புவியில் உயிர்வாழத் தேவையான வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்க கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஓஸோன், குளோரா புளோரோ கார்பன் ஆகிய வாயுக்கள் தேவைப்படுகிறது. 
இயற்கையாக ஒரு சமநிலையில் இந்த வாயுக்கள் மூலம் வெப்பக்கதிர்வீச்சு நிகழும்போது வளிமண்டலத்தின் வெப்ப நிலை சீராக காணப்படும். இதன்மூலம், உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்றச் சூழல் ஏற்படுகிறது. 
இதனையே பசுமை இல்ல விளைவு என்கிறோம். ஆனால், வளர்ச்சி எனும் பெயரில் வாகனங்கள் பெருக்கம், தொழிற்சாலை மாசு அதிகரிப்பு ஆகியவற்றால் கார்பன் டை ஆக்ஸைடை அதிகளவில் உற்பத்தி செய்வதால் புவி வெப்பமடைந்து பல்வேறு பருவ மாறுபாடுகளை விளைவித்து வருகிறது.   அதன்படி, குளிர் நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அதிக வெப்பநிலை, அனல்காற்று வீசுகிறது. பாலைவனப்பகுதியில் ஆண்டின் சாராசரி மழை ஒரே நாளில் பெய்கிறது. 
இதனால், உயிரினங்கள் இடம்பெயர்வு, பனிமலைகள் வேகமாக உருகுதல், வழக்கத்துக்கு மாறாக அதிக புயல்-மழைகள் ஏற்படுவது, நுண்ணுயிர் பெருக்கம், காற்றில் மாசு அதிகரித்தல், நிலத்தடி நீர் சரிவு உள்ளிட்டவை ஏற்பட்டு வருகிறது. 
கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் பருவமழை பொய்த்து வறட்சி ஏற்பட்டுள்ளது. அதோடு, பருவமழை சீரானதாகவும் இல்லை. 10 ஆண்டுகளில் மட்டும் 15 விதமான புயலை தமிழகம் சந்தித்துள்ளது. புவி வெப்பமாதல் என்பது ஒளமிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என்பதை தற்போதுதான் உலக நாடுகள் உணர்ந்துள்ளன. 
அதன்படி, கார்பன் டை ஆக்ஸைடு வாயுவின் உற்பத்தியைக் குறைக்கும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் பேட்டரி வாகனங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. 
குடிநீருக்கு ஆதாரமான மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள சோலைக் காடுகளை பாதுகாக்க வேண்டும். மரம் வளர்ப்பு திட்டங்களை அதிகளவில் செயல்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். மாறாக, இதே நிலைமை நீடிக்கும் பட்சத்தில் அடுத்த 50 ஆண்டுகளில் மனித இனம் அழிவை சந்திக்க நேரிடும் என்றார்.
கருத்தரங்கினை, மணப்பாறை, முசிறி மாவட்ட கல்வி அலுவலர்கள் க.ராஜலிங்கம், சி.செல்வி ஆகியோர் தொடக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர். பள்ளி தலைமையாசிரியர் ஆர். ஞானசுசிகரன் வரவேற்றார். வாய்ஸ் அறக்கட்டளை திட்ட இயக்குநர்  ஏ.கிரகோரி முன்னுரையாற்றினார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் எம்.சத்தியமூர்த்தி ஒருங்கிணைத்தார்.
கருத்தரங்கில், சுமார் 200-க்கும் மேற்பட்ட பசுமைப்படை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com