சுடச்சுட

  

  திருவானைக்கா சன்னதி வீதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாநகராட்சி, பொது பணித் துறையைக் கண்டித்து புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   ஸ்ரீரங்கம் பகுதி சங்கப் பொருளாளர் ஏ.சந்துரு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வாய்க்கால்களை தூர்வாரவேண்டும், கழிவுநீர் கால்வாய் போல் மாறியதால் பல விதமான நோய்கள் பரவி வருவதை தடுக்க வேண்டும்,விவசாய நிலம் மாநகராட்சியின் கழிவுநீர் சூழ்ந்து குட்டையாக மாறிவிட்டதை கண்டு கொள்ளாமல் இருக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அபராதம் விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
   ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் ஏ.சந்திரபிரகாஷ், செயலாளர் பா.லெனின் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார்கள்.
   இதில், சுப்பிரமணி, முத்து, ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai